எப்படி ஆரம்பிச்சாங்களோ அப்படியே தா இருக்கு.. கோவையில் ஆமை வேகத்தில் மேம்பால பணி : எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியலால் பரபரப்பு…!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2022, 8:24 pm

கோவையில் மேம்பாலம் பணிகளை வேகமாக கட்டி முடிக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் கவுண்டம்பாளையம்,திருச்சி சாலை ஆகிய இடங்களில் மேம்பால பணிகள் கட்டி முடிக்கப்பட்டு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நான்கு ஆண்டுகள் ஆகியும் உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் முடிவடையாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் இதனால் வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸ்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளவதாகவும், இந்த மேம்பால பணியை விரைந்து முடிக்கக்கோரி SDPI கட்சியினர் ஆத்துப்பாலம் பகுதியில் நெடுஞ்சாலைதுறைக்கு எதிராக கண்டன கோஷங்களை இட்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தபோது போலீசாருக்கும் எஸ்டிபிஐ கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!