‘நம்ம இடத்தை நாம் தான் சரியா வச்சிக்கனும்’… யூனிஃபார்மில் சாலையை சீரமைத்த கோவை போலீசாருக்கு குவியும் பாராட்டு!!

Author: Babu Lakshmanan
22 May 2024, 10:15 am

வெரைட்டி ஹால் ரோட்டில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீஸாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கோவையில் ஒரு சில பகுதியில் தரமற்ற சாலை அமைத்திருப்பதால் சாலை குண்டு குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும், கடந்த ஒரு வார காலமாக கோவையில் மழை பெய்ததால் சில பகுதிகளில் சாலையில் பழுதடைந்த நிலையில் உள்ளது.

மேலும் படிக்க: நெல்லையில் பிரபல ரவுடி கொலை சம்பவம்.. உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்… 5 பேரை கைது செய்த போலீசார்…!!

அதனைத் தொடர்ந்து, கோவை குட்செட் சாலை ஒருபுறம் பழுதடைந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். மேலும், ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய சாலை என்பதால் அதிகளவில் இந்த சாலையில் வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம்.

மேலும் சாலை பழுதடைந்ததால் அவ்வப்போவது கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. சாலையை சீரமைக்கும் வகையில் வெரைட்டி ஹால் போக்குவரத்துக் காவலர் தமிழ்செல்வன் அந்த பகுதியில் பணி பார்த்து கொண்டிருந்தபோது, சாலை பழுதானதை கண்டு அருகிலிருந்த ஜல்லிக்கற்களை கொண்டு பழுதான பகுதியில் கற்களை கொட்டி சாலையை சீரமைத்தார்.

தமிழ்ச்செல்வன் போலீஸ் உடையில் சாலையை சீரமைத்து காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவருக்கு இணையதளம் மூலமாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

  • Actor Vinayakan controversy போதையில் செய்த அடாவடி…என்னால சமாளிக்க முடியல…மன்னிப்பு கேட்ட விநாயகன்…!