கோவை வடவள்ளி பகுதியில் வசிக்கும் திருநங்கை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வடவள்ளியில் இருந்து மருதமலை ரோடு செல்லும் பகுதியிலே இந்திரா நகர் உள்ளது. இங்கு வசிக்கும் திருநங்கை மாசி. மாசி என்கிற திருநங்கை, அவரின் ஆண் நண்பர் மணியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், குன்னூரை சேர்ந்த மென்பொறியாளர் திருநங்கை தனலட்சுமி (வயது 39) என்பவருக்கு மாசியுடன் பழக்கம் ஏற்பட்டது.
தனலட்சுமி ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் அனாலிஸ்டாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. மாசியுடன் தனலட்சுமிக்கு நட்பு ஏற்பட்டு, கடந்த சில வாரங்களாக மாசியுடன் ஒரே வீட்டில் தனலட்சுமியும் வசித்து வந்து உள்ளார்.
இந்த நிலையில், இரவு மர்ம நபர்கள் தனலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் சம்பவ இடத்திலேயே தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாநகர தெற்கு துணை ஆணையாளர் சரவணகுமார், உதவி ஆணையர் ரவிகுமார் மற்றும் வடவள்ளி காவல் துறையினர் இந்திராநகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த தனலட்சுமியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தனலட்சுமியை யார், எதற்காக கொலை செய்தார்கள்? முன் விரோதம் காரணமா? வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் திருநங்கை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.