உக்கடம் மேம்பால பணிக்காக கடைகள் இடிப்பு… எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் ; சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு..!!

Author: Babu Lakshmanan
8 August 2023, 6:59 pm

கோவை உக்கடம் மேம்பால பணிக்காக கடைகளை இடிக்க முயற்சி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே சுமார் 2.4 கி.மீ தூரத்துக்கு மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆத்துப்பாலத்தில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்கு திரும்பும் சாலையில் இடப்புறத்தில் உள்ள கடைகளை இடிப்பதற்கு இன்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.

அப்போது, கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் அப்பகுதியினர் கடும் வாக்குவாதம் செய்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் உக்கடம் ஆத்துப்பாலம் இடையே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 402

    0

    0