கோவை உக்கடம் மேம்பால பணிக்காக கடைகளை இடிக்க முயற்சி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே சுமார் 2.4 கி.மீ தூரத்துக்கு மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆத்துப்பாலத்தில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்கு திரும்பும் சாலையில் இடப்புறத்தில் உள்ள கடைகளை இடிப்பதற்கு இன்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.
அப்போது, கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் அப்பகுதியினர் கடும் வாக்குவாதம் செய்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் உக்கடம் ஆத்துப்பாலம் இடையே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
This website uses cookies.