கோவை உக்கடம் புதிய மேம்பால பணியின் போது சரிந்த இரும்பு சாரம் : குடியிருப்புகள் மீது விழும் அபாயம்.. பொதுமக்கள் அச்சம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2022, 5:01 pm

கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 1.9 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. 215 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டு பணிகள் நடக்கிறது.

இது தவிர 265 கோடி ரூபாய் செலவில் மூன்று இடங்களில் ஏறுதளம் மூன்று இடங்களில் இறங்குதளம் அமைக்கும் பணி நடக்கிறது. உக்கடம் டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்து நியூ வடிவில் ஏறுதலும் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பஸ் ஸ்டாண்டுக்குள் ஐந்து இடத்தில் தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு ஏறுதளத்திற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாங்கும் தூண்களை இணைக்கும் பாலத்திற்கான இரும்பு சாரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

3000-க்கும் மேற்பட்ட இரும்பு சாரங்களை இணைத்து இந்த சாரம் போடப்பட்டிருந்தது. நேற்று இரவு பில்லர் அருகே கான்கிரீட் போடப்பட்டுள்ளது. 200 அடி நீளத்திற்கு 100 அடி அகலத்திற்கு போடப்பட்ட கான்கிரீட் பாலம் ஆட்டம் காண்பது சாரத்துடன் கான்கிரீட் பாலம் வடக்கை நோக்கி சாயத் துவங்கியது.

அதிர்ச்சியடைந்த நெடுஞ்சாலை பணியாளர்கள் பணியை நிறுத்தினர். காங்கிரட் பாலம் காம்பவுண்ட் சுவரை தாண்டி அருகில் இருந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பி பிளாக் வீடுகள் மீது விழும் அபாயம் இருந்தது.

இந்த பிளாக்கில் ஐந்து மாடுகளுடன் 30 வீடுகள் உள்ளன. வீட்டில் வசித்து வந்த மக்கள் பாலம் சரியப் போவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில் சாரத்தில் இருந்த இணைப்பு கிளாம்புகள் சில இடங்களில் துண்டாகிவிட்டது. இதை சரி செய்து சாரத்தை சீரமைக்கும் பணி நடக்கிறது. கான்கிரீட் பகுதி கீழே விழாதென நினைக்கிறோம் சரியான பகுதியில் இருந்து கான்கிரீட் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது என கண்டறியப்படும்.

அதற்கேற்ப திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும், வீடுகளின் மீது கான்கிரீட் பாலம் விழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 529

    0

    0