யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு : கோவை அம்மா அகாடமியில் படித்த மாணவி 2வது இடம்!!
Author: Babu Lakshmanan30 May 2022, 7:38 pm
கோவை : யு.பி.எஸ்.சி. தேர்வில் அம்மா அகாடமியில் படித்த கோவையைச் சேர்ந்த மாணவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
கோவையில் நல்லறம் அறக்கட்டளை இலவசமாக நடத்தி வரும் அம்மா ஐஏஎஸ் அகாடமியில் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், படித்த மாணவர்கள் நடந்துமுடிந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் தேசிய அளவில் 46வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கோவை காந்திபுரம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த ரம்யா சந்திரசேகர் என்ற மாணவி சிவில் சர்வீசஸ் தேர்வில் தேசிய அளவில் 46வது இடத்தையும், தமிழக அளவில் 2வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் கோவையில் படித்த இவர் தனியார் கல்லூரியில் EEE முடித்துள்ளார். மேலும், கோவை பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்த கமலேஸ்வரி ராவ் என்ற மாணவர் 297வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதேபோல, கோவையை சேர்ந்த சுவாதி ஸ்ரீ என்ற மாணவி இந்திய அளவில் 45வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.