புத்தாண்டை முன்னிட்டு புதிய தோற்றத்தில் கோவை வாலாங்குளம் : சோதனை ஓட்டமாக நடைபெற்ற லேசர் நிகழ்ச்சி!!
Author: Udayachandran RadhaKrishnan31 December 2023, 10:46 am
புத்தாண்டை முன்னிட்டு புதிய தோற்றத்தில் கோவை வாலாங்குளம் : சோதனை ஓட்டமாக நடைபெற்ற லேசர் நிகழ்ச்சி!!
கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக 20 ஆயிரம் எல்இடி விளக்குகள் பொருந்திய லேசர் நிகழ்ச்சி சோதனை ஓட்டம் கண்டு களித்த பொதுமக்கள்
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்ற முடிந்துள்ளது மேலும் பல இடங்களிலும் தொடர்ந்து கோவை மாநகரை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் வாலாங்குளத்தில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக மாநகராட்சி மற்றும் டிரம்ப் அமைப்பின் சார்பாக சுமார் 20000 வண்ண விளக்குகள் பொருந்திய லேசர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதன் சோதனை ஓட்டமாக இன்று வாலாங்குளம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து லேசர் ஷோ நிகழ்ச்சி சோதனை ஓட்டமாக நடைபெற்றது.
இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பாலத்தின் மீது நின்ற வாரு கண்டு ரசித்தனர் நாளை நடைபெற உள்ள புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ரோல்கள் பறக்கவிடப்பட்டு நட்சத்திர வடிவில் மற்றும் ஹேப்பி நியூ இயர் வாசகங்கள் வடிவில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த உள்ளனர். அதனை தொடர்ந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் குளத்தின் கரையில் நடைபெற உள்ளது.