சுற்றுலா சென்ற இடத்தில் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த கதி ; தேடத்தேட கிடைத்த சடலங்கள் ; வால்பாறையில் அதிர்ச்சி சம்பவம்
Author: Babu Lakshmanan20 October 2023, 6:56 pm
சுற்றுலா சென்ற இடத்தில் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த கதி ; தேடத்தேட கிடைத்த சடலங்கள் ; வால்பாறையில் அதிர்ச்சி சம்பவம்
கோவை ; வால்பாறையில் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறைக்கு கிணத்துக்கடவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நபில், வினித் குமார், தனுஷ், அஜய், சரத் ஆகிய ஐந்து பேர் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். வால்பாறையில் சுற்றுலா பகுதிகளை பார்த்துவிட்டு மாலை 5 மணி அளவில் சோலையார் ஆற்றில் குளித்துள்ளனர்.
திடீரென ஆற்றில் தண்ணீர் அதிக அளவு வந்ததால் ஐந்து பேரையும் தண்ணீர் அடித்து சென்றது. மாணவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு 5 பேரின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். சுற்றுலா வந்த இடத்தில் ஐந்து கல்லூரி மாணவர்கள் உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.