வெள்ளியங்கிரி மலைக்கு ஆசை ஆசையாக வந்த தூத்துக்குடி இளைஞர்..படி இறங்கும் போது சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2025, 1:13 pm

தென் கைலாயம் என பக்தர்களால் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஏழு மலையலை கடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்று பேர் உடல்நிலை சரி இல்லாமல் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் புவனேஷ்வரன் (18) தனது பள்ளி நண்பர்களான முத்துக்குமார் மற்றும் ஹரிஹரசுதன் ஆகியோருடன் கடந்த 17.04.2024 அன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு நேற்று 18.04.2025 காலை வெள்ளிங்கிரிக்கு வந்தடைந்து உள்ளனர்.

இதையும் படியுங்க: துரை வைகோ விலகல்.. பின்னணியில் மல்லை சத்யா? அதிர்ச்சியில் வைகோ!

அங்குள்ள சாமி தரிசனம் முடித்து விட்டு நேற்று இரவு மலையில் இருந்து இறங்கும் போது, ஏழாவது மலையில் புவனேஷ்வரன் கால் தவறி சுமார் 10 மீட்டர் ஆழத்தில் உருண்டு விழுந்து உள்ளார்.

இந்த விபத்தில் புவனேஷ்வரனின் இடது காதின் அடியிலும், தலையின் பின் பக்கத்திலும் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டோலி பாரம் தூக்கும் பணியாளர்கள், கடும் சிரமத்திற்கு இடையே புவனேஷ்வரனை அடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர்.

Velliangiri Hills Thoothukudi Youth Dead in 7th Mountain

பின்னர் அவர் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி புவனேஷ்வரன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து புவனேஷ்வரனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தற்போது பூண்டிக்கு வந்து உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • shine tom chacko arrested by ernakulam police போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…
  • Leave a Reply