ஒரு காலத்தில் எப்படி இருந்த வஉசி உயிரியல் பூங்கா? இன்று அங்கீகாரம் ரத்து : கோவை மக்கள் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2024, 4:01 pm

இயற்கை சூழலின்மை, கட்டமைப்பு வசதியில் குறைபாடு காரணமாக கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்து, மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 1965 – ம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது. இங்கு ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 532 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வந்தது.

வார நாட்களில் தினசரி 300 முதல் 350 பேரும், விடுமுறை நாட்களில் 1,500 முதல் 2,000 பேரும் வந்து சென்றனர்.சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட பூங்கா என்பதால், பழைய கட்டமைப்பு வசதிகள் மட்டுமே உள்ளன.

இச்சூழலில், பூங்கா மற்றும் விலங்கினங்களின் பராமரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு துறையின் கீழ் செயல்படும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்தது.

மேலும்,பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்கினங்களுக்கு வனத்தில் உள்ளது போல இயற்கை சார்ந்த சூழல் அளிக்கப்படவில்லை. உயிரியல் பூங்காவுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு இருப்பதில் குறைபாடுகள் உள்ளன என பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டிய ஆணையம், குறிப்பிட்ட சூழலில் உயிரியல் பூங்காவின் செயல்பாட்டைத் தொடர்வது மோசமான பாதிப்புகளை உருவாக்கும் எனவும் தெரிவித்து இருந்தது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு அங்கு இருந்த பாம்புகள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் விடுவிக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு இருந்த மான்களை அடர்ந்த வனப் பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக மான்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்குக் காசநோய் தொற்று இல்லை என்று அறிக்கை பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் 26 புள்ளி மான்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக பூங்காவில் உள்ள கட மான் மாற்றம் செய்ய திட்டமிட்டு அதன் புழுக்கைகளை ( faecal pellets ) ஆய்வகத்திற்கு (AIWC, Vandalur) அனுப்பப்பட்டு கட மான்களுக்கு காசநோய் தொற்றும் எதுவும் இல்லை என்று அறிக்கை பெறப்பட்டது.

பின்பு மார்ச் 2024 மாதம் முதல் மான்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு கூடுதலாக பச்சைத் தீவனங்கள் மற்றும் சிறுவாணி மலை அடிவாரப் பகுதிகளில் மான்கள் உண்ணும் தாவர வகைகளை மான்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து இவைகளை வனப் பகுதிக்கு மாற்றம் செய்திட ஏதுவாக கோவை மாநகராட்சி மினி லாரி வாகனத்தில் வனத்துறை மூலம் கூண்டு கட்டமைக்கப்பட்டது.

கோவை மாவட்ட வன அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் போலுவம்பட்டி வன பணியாளர்கள், கோவை வனமண்டல வன கால்நடை அலுவலர் கோவை வ உ சி வன உயிரியல் பூங்கா இயக்குனர், வனத்துறை அலுவலர்கள் மற்றும் கோவை மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் இன்று காலை 5 எண்ணிக்கை ( Adult male 2 + Adult female 3 total 05) கட மான்கள் பிரத்தியேக கூண்டு வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் சராகம் வனப் பகுதியில் நல்ல முறையில் விடுவிக்கப்பட்டது.

விடுவிக்கப்பட்ட கட மான்கள் தீவன உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் மற்றும் அதன் ஆரோக்கியத்தினை தொடர்ந்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை என தெரிவித்தனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 269

    0

    0