கோவை வ.உ.சி. பூங்காவை வனத்துறையினர் நிர்வகிக்க வேண்டும்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

Author: Rajesh
11 February 2022, 2:09 pm

கோவை: கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவை தமிழக வனத்துறையின் கீழ் உள்ள உயிரியல் பூங்கா ஆணையம் மேற்கொள்ள கடிதம் எழுதப்பட்ட சூழலில் பூங்காவை வனத்துறை நிர்வகிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் சமீபத்தில் ரத்து செய்துள்ளது. இதனையடுத்து பூங்கா பராமரிப்பை தமிழக வனத்துறையின் கீழ் உள்ள உயிரியல் பூங்கா ஆணையம் மேற்கொள்ள கடிதம் எழுதப்பட்டது.

மேலும், பூங்காவுக்கான கட்டமைப்புகளை உருவாக்கி வனத்துறை அதே இடத்தில் நிர்வகிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்தில் உயிரியல் பூங்கா ஒன்று மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பராமரிப்பு செய்யப்படுவது கோவையில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. உயிரியல் பூங்கா பராமரிப்பு குறித்து மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கையானது சமர்பிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

இத்தகைய சூழலில் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் அளவுக்கு நிபுணத்துவத்தை மாநகராட்சி பணியாளர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அனைத்தையும் ஆலோசித்த பிறகே, வ.உ.சி. உயிரியல் பூங்காவின் பராமரிப்பை வருவாய் பகிர்வு அடிப்படையில் ஏற்றுக் கொள்ள தமிழக வனத்துறையின் கீழ் உள்ள உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் வனத்துறை இதே இடத்தில் பூங்காவை நிர்வகிக்கலாம் அல்லது, பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை வேறு இடத்திற்கு மாற்றலாம். இதுகுறித்த தெளிவான முடிவு எட்டப்படவில்லை. மீண்டும் அதே இடத்தில் வனத்துறை பூங்காவை செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. ” என்றார்.

  • expecting good bad ugly movie collection will overtake jailer movie collection ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?