கோவை மருதமலை அண்ணா பல்கலைகழகம் அருகே உள்ள வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகளிடையே ஏற்பட்ட மோதலில் ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.
கோவை தடாகம் வனப்பகுதியில் இருந்து மருதமலை வனப்பகுதி வழியாக தினமும் காட்டு யானைகள் இடம் பெயர்ந்து வருகிறது. இந்த நிலையில் மருதமலை அருகே உள்ள அண்ணா பல்கலைகழகம் பின்புறம் உள்ள வனப்பகுதியில் நேற்று ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாக கோவை வனச்சரக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்ட ஆய்வில் உயிரிழந்த ஆண் யானையின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவ குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உயிரிழந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் உயிரிழந்த யானை மற்றொரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் உடலில் காயங்கள் ஏற்பட்டு, அதனால் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என கால்நடை மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்தனர்.
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
This website uses cookies.