கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக காலில் அடிபட்ட காட்டுயானை உணவு தேட செல்லமுடியாமல் தவித்து வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் யானை, காட்டெருமை, மான், என பல்வேறு வகையான விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் அருகே உள்ள கிளாஸ் ஹவுஸ் பகுதியில் காட்டு யானை கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் நடக்கமுடியாமல் கடந்த ஒரு வாரமாக ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறது.
இதனால் அது தனக்குத் தேவையான உணவை தேட முடியாமல் தவித்து வருகிறது. இதுபற்றி யானை பாகன்கள் வனத்துறை அதிகாரிகளிடம் கூறியும் வனத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இதுவரை எந்த மருத்துவ சிகிச்சையும் கொடுக்காததால் உணவின்றி தவித்து வருகிறது.
பரிதாபமாக உள்ள காட்டு யானையை உடனடியாக வனத்துறை அதிகாரிகள் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.