கோவையில் தொடரும் யானைகளின் உயிர்பலி… சிறுமுகை வனச்சரகத்தில் ஆண் யானை சடலமாக மீட்பு.. வனத்துறையினர் விசாரணை
Author: Babu Lakshmanan11 May 2022, 6:36 pm
கோவை சிறுமுகை வனச்சரகத்தில் இறந்த நிலையில் 8 வயது ஆண் யானை கண்டறியப்பட்டது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரக அலுவலர் தலைமையில் தனிக்குழு இன்று சிறுமுகை வனச்சரகம், மோதூர் பெத்திக்குட்டை அடர் வனப்பகுதியில், பெத்திக்குட்டை பிரிவு, வரப்பள்ளம் சராகத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது வனப்பகுதியில் சுமார் 8 முதல் 11 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இறந்த நிலையில் கண்டறியப்பட்ட ஆண் யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.