காரில் லைட்டை போட்டு காட்டு யானையை தலைதெறிக்க ஓட விட்ட சம்பவம்… அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

Author: Babu Lakshmanan
17 February 2024, 10:14 am

யானையை ஆபத்தான முறையில் உயர் ஒலி விளக்குடன் விரட்டிய அதிமுக நிர்வாகிக்கு வனத்துறையினர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

கோவை பொள்ளாச்சி எடுத்த ஆனைமலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மிக முக்கியமான பகுதியான நவமலை உள்ளிட்ட இடங்களில் காலையில் நடமாட ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பயணிக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கின்றன.

நவமலை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் உள்ளிட்டவை அதிகமாக நடமாடுவதால், மனித விலங்கு முரண்களை தடுக்கும் விதமாக, வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றார்கள்.

இந்த நிலையில், நவமலை பகுதியில் தோட்டத்திற்கு சென்ற கோட்டூர் சார்ந்த அதிமுக தொண்டரான மிதுன் உயர் ஒலியுடன் (ஹைபீம்லைட்) வாகனத்தை இயக்கியிருக்கின்றார். ஒரு யானையை அபாயகரமாக விரட்டி இருக்கின்றார். மிரண்டு ஓடும் அந்த யானை, வனப்பகுதிகளுக்குள் நுழைந்து ஓடுகின்றது. இதனை அந்த நபர் தனது சமூக வலைதள பக்கத்திலே பகிர்ந்து இருக்கின்றார்.

இந்த வீடியோவை வைத்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அந்தக் கார் வெள்ளை நிற ஸ்கார்பியோ என்பது தெரிய வந்தது. இந்த வாகனத்தை ஓட்டி வந்தது கோட்டூரை சார்ந்த மிதுன் என்பதனை அறிந்து வனஉயிர் பாதுகாப்பு சட்ட பிரிவில் நடவடிக்கை எடுத்த வனத்துறை, மிதுனுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளது. வீடியோ காட்சிகளை பார்க்கும் பொழுது வன உயிர் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பது தெரிய வருந்தது.

தடை செய்யப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டுடன் உள்ள வன பகிதிகளுக்குள் பயணிப்பதே குற்றம் என்ற நிலையில், பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலிலுள்ள வன விலங்குகளை துன்புறுத்துவது, யானை போன்ற விலங்கினங்களிடம் ஆபத்தான முறையில் நடந்து கொள்வது சட்டப்படி பெரும் குற்றம். வன உயிர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய மிதுனை அதிகாரிகள் எச்சரித்து அபராதம் வித்தித்தனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu