சுவாமி சிலையை தொட்டு வணங்கிச் சென்ற காட்டு யானை… கோவை அருகே நெகிழச் செய்த சம்பவம்…!!

Author: Babu Lakshmanan
29 February 2024, 1:42 pm

சுவாமி சிலையை தொட்டு வணங்கிச் சென்ற காட்டு யானை… கோவை அருகே நெகிழச் செய்த சம்பவம்…!!

கோவை காருண்யா பகுதியில் தனியார் பள்ளி வளாகத்தில் புகுந்த யானை ஒன்று அங்கிருந்த சிலையை தொட்டுச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மேற்கு தொடர்ச்சி அடிவாரங்களில் யானைகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிக அளவில் காணப்படுகிறது. உணவு தேடியும் குடிநீர் தேடியும் குடியிருப்பு பகுதிகள், விவசாயப் பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் யானை சுற்றி திரிந்தது.

அப்போது பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் சிலையை யானை தொட்டு நுகர்ந்து சென்றது. யானை கடவுள் சிலையை தொட்டு வணங்கிச் சென்றதாக கூறி பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 265

    0

    0