சாலையில் ஒய்யாரமாக நடைபோட்ட பாகுபலி… அச்சப்படாத வாகன ஓட்டிகள் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
10 August 2022, 10:18 am

கோவை – மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் வாகனங்களுக்கு மத்தியில் காட்டு யானை பாகுபலி உலா வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து ‘பாகுபலி’ என மக்களால் அழைக்கப்படும் காட்டு யானை, அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, விவசாய விளைநிலங்களிலும், வனச்சாலைகளிலும் நடமாடி வருகிறது.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பாகுபலி, மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் ஓடந்துரை பகுதியில் நடமாடியது.

சாலையின் ஓரத்தில் வெகுநேரமாகியும் காட்டு யானை பாகுபலி வனத்தினுள் செல்லாமல் நின்று கொண்டிருந்த நிலையில், வாகன ஓட்டிகளோ, அதனை சற்றும் பொருட்படுத்தாமல் அதிக அளவில் சென்றுகொண்டே இருந்தன. இருப்பினும், காட்டு யானை பாகுபலியோ, யாரையும் அச்சுறுத்தாமல் அதன் போக்கில் சாலையின் ஓரத்தில் நடந்து கொண்டே இருந்தது.

ஒருகட்டத்தில், சாலையில் வாகனங்கள் அணிவகுத்து செல்ல அந்த போக்குவரத்து நெரிசலில் யானை பாகுபலி ஊர்ந்து சென்று சாலையை கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!