எங்களுக்கும் ரூம் கிடைக்குமா..? கூட்டம் கூட்டமாக கிரீன் ஹோம் விடுதிக்குள் புகுந்த காட்டு யானைகள்…!!

Author: Babu Lakshmanan
20 June 2023, 8:30 am

கோவை ; கோவை தொண்டாமுத்தூர் அருகே கிரீன் ஹோம் விடுதிக்குள் காட்டு யானைகள் கூட்டம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம், கூட்டமாக நடமாடி வருகின்றன. மருதமலைக்கு செல்லும் பக்தர்கள் மலைப் பாதையில் நடந்து செல்ல 6 மணிக்கு மேல் அனுமதி இல்லை.

கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டமாக அப்பகுதியில் கடந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொண்டாமுத்தூர் பகுதி குப்பேபாளையம் பகுதியில் உள்ள கிரீன் ஹோம் என்ற தனியார் விடுதி வளாகத்தித்குள் யானைகள் கூட்டம் புகுந்துள்ளது.

https://player.vimeo.com/video/837776988?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

இதனை அங்கு தங்கி இருந்த சுற்றுலா பயணி ஒருவர் யானைகள் கூட்டம் வந்து செல்லும் காட்சியை தனது செல்போனில் பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யானை நடமாடும் பகுதிகளில் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என வனத் துறையினரும் எச்சரித்து வருகின்றனர்.

  • gautham karthik shortened his name as grk தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?