‘வீட்டை அபகரிக்க முயற்சி.. திமுகவினர் அடியாட்களை வைத்து மிரட்டுறாங்க’ : தாயுடன் சென்று மகள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்..!!

Author: Babu Lakshmanan
17 November 2022, 12:27 pm

கோவை ;குடியிருந்து வரும் வீட்டை அபகரிப்பதற்காக திமுகவினர் அடியாட்களை கொண்டு மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி பகுதியில் வசித்து வருபவர் தேவகி. தேவகியின் கணவர் முத்துச்சாமிக்கு அவரது தாய்மாமன் பழனியப்பன் கொடுத்த இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில் நிலம்கொடுத்த பழனியப்பன் மற்றும் கணவர் முத்துச்சாமி, இருவரும் வெவ்வேறு காலங்களில் இறந்துவிடவே, கணவர் இறந்த பின் கடந்த 4 ஆண்டுகளாக அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் தேவகி.

இந்நிலையில் அந்த வீட்டை காலி செய்து அங்கிருந்து கிளம்பும்படி உயிரிழந்த பழனியப்பனின் இரண்டாவது மனைவி பொன்னம்மாள், குண்டர்களையும் அடியாட்களை கொண்டு மிரட்டியதாக தேவகி மற்றும் அவரது உறவினர்கள் கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.

இது தொடர்பாக பேசிய தேவகியின் மகள் புனிதா, தனது தாய் தேவகி அந்த வீட்டில் தனியாக வசித்து வருவதை அறிந்த பொன்னம்மாள், கடந்த நேற்று மாலை 4 மணியளவில் குண்டர்கள், அடியாட்களை கொண்டு அந்த வீட்டை அபகரிக்கும் நோக்கில் மிரட்டுவதாகவும், வீட்டை உடனடியாக காலி செய்யவேண்டும் என்றும், இந்த இடத்தையும், வீட்டையும் வாங்கிவிட்டதாகவும் கூறி அப்பகுதி திமுகவினருடன் வந்து மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, வடவள்ளி காவல் நிலையத்தில் சென்று புகாரளித்தும் புகாரை வாங்க மறுத்த ஆய்வாளர், இந்த பிரச்சனை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும், இது தொடர்பாக தக்க காவல்கண்காணிப்பாளர் தக்க நடவடிக்கை எடுத்து தங்களை காப்பாற்ற வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!