எங்க சாமி அண்ணாமலை.. அவரை முழுசா நம்புறேன் ; நெஞ்சை உருக்கும் ஏழைத் தாயின் வீடியோ..!

Author: Babu Lakshmanan
4 April 2024, 10:35 am

அண்ணாமலை வெற்றி பெற்றால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியது.

தமிழகத்தில் மது மற்றும் போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிவு மட்டுமல்லாமல் அந்த குடும்பங்களும் மிகவும் நொடிந்து போகின்றன. இதனால், பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க: இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை ; ஒரே நாளில் ரூ.360 அதிகரிப்பு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

கோவை மாவட்டம் சூலூர் அருகே சிந்தாமணிபுதூரில் ஒரு குடும்பத்தில் குடிப்பழக்கத்தால் கணவனை ஏற்கனவே இழந்தும், தற்போது மகனும் குடிப்பழக்கத்தால் சீரழிந்து போய் உள்ளதாகவும் கண்ணீர் வடிக்கும் தாயின் கதறல் நெஞ்சை உருக்கும் விதமாக உள்ளது.

தனது ஒரே மகன் மது பழக்கத்தால் சீரழிந்து விட்டதாகவும், தற்போது தனது குடும்பம் கடன் பிடியில் சிக்கித் தவிப்பதாகவும், இந்த நிலை எப்போது மாறும் என கண்ணீர் வடிக்கும் தாய், அண்ணாமலை வெற்றி பெற்றால் தனக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ