பிரசவ வலியில் துடித்த பெண்.. வீட்டிலேயே பிரசவம் பார்த்த 108 மருத்துவ உதவியாளர்..!

Author: Vignesh
15 August 2024, 10:20 am

கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் வினித் குமார். இவரது மனைவி காயத்ரி (24), நிறைமாத கர்ப்பிணியான காயத்ரிக்கு நேற்று இரவு திடீரென வலி ஏற்பட்டுள்ளது.வழி தொடர்ந்து அதிகரித்த நிலையில் வீட்டிலிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்துள்ளனர்.

அங்கு 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் வந்து பார்த்தபோது காயத்ரி வலியால் துடித்ததோடு, குழந்தை பிறக்கும் சூழல் ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவ உதவியாளர் ராமு மற்றும் ஓட்டுநர் சந்திரசேகர் ஆகியோர் காயத்ரிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்.

இதில், அழகான ஆண் குழந்தை பிறந்தது.இதையடுத்து காயத்ரி மற்றும் குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • str 49 movie shooting postponed because of director சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?