ஆபிசில் பெண் ஊழியரிடம் அத்துமீறல்… செல்போனிலும் டார்ச்சர் ; சேட்டை செய்த தனியார் நிறுவன உரிமையாளர்…!!

Author: Babu Lakshmanan
11 April 2023, 12:46 pm

கோவை ; பெண் ஊழியரை தகாத வார்த்தைகள் பேசி அடிக்க முயன்ற தனியார் நிறுவன உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

சேலம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. டீச்சர் ட்ரைனிங் முடித்துள்ள இவர் காளப்பட்டி பகுதியில் உள்ள சாஸ்தா பில்டர்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில் மூன்று மாதமாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திக் காயத்ரியிடம் அத்துமீறி பேசுவதும், வேண்டுமென்றே வேலைப்பளுவை அதிகரித்தும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், போன் மூலமாக அதிகப்படியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான காயத்ரி, நிறுவன உரிமையாளரை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி உரிமையாளர் காயத்ரியை அலுவலகத்தில் வைத்து அடிக்க முற்பட்டுள்ளார். ஐந்து நிமிடம் தாமதமாக அலுவலகத்திற்கு வந்தால் 500 ரூபாய் அபராதம் விதித்து உள்ளார்.

https://player.vimeo.com/video/816446235?h=dfac89207c&badge=0&autopause=0&player_id=0&app_id=58479

இவரின் நடவடிக்கை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் காயத்ரி பீளமேடு காவல் நிலையத்தில் கார்த்திக் மீது புகார் மனுவை எழுதி கொடுத்தார். புகாரின் பேரில் பீளமேடு காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 370

    0

    0