கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 கிடைக்கப் பெற்ற, தங்கள் வீடுகளின் முன்பு கோலமிட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். நேற்று முன்தினம் இதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்றைய தினமே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மகளிர் சிலருக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. இதனால், பணம் கிடைக்கப்பெற்ற பெண்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.
அதேவேளையில், பெரும்பாலான தகுதியுள்ள பெண்களுக்கு கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே, மீதமுள்ளவர்களுக்கு இன்று செலுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மகளிர் உரிமை தொகையை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை வெள்ளலூர், செல்வபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களது இல்லங்களின் முன்பு கோலமிட்டு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
This website uses cookies.