78-வது சுதந்திர தினம்.. மூவர்ண பலூன்களை பறக்கவிட்ட ஆட்சியர்..!

Author: Vignesh
15 August 2024, 10:32 am

கோவை: 78வது சுதந்திர தினம் – மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி வைத்து மூவர்ண பலூன்களை பறக்க விட்டு, காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே போல் கோவை வ.உ.சி மைதானத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


இதனைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்று கொண்டார். இதனையடுத்து மூவர்ண பலூன்களை குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் வானத்தில் பறக்க விட்டார். தொடர்ந்து கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் 83 பேருக்கு,அரசு அலுவலர்கள் 140 பேருக்கு, மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள், மொழி போராட்ட தியாகிகள் என பலருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதே போல் வாஹா எல்லையில் நடைபெறும் போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Udit Narayan viral kiss video ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!