அந்த கட்டணம் இந்த கட்டணம் என கூறி பள்ளி மாணவிகளிடம் பணம் வசூல் : தவறை மறைக்க அரசுப்பள்ளி தலைமையாசிரியர் செய்த ட்ரிக்ஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2022, 5:02 pm
Govt School HM - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பள்ளி மாணவ மாணவியர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த தலைமை ஆசிரியர் தான் செய்த தவறை மறைப்பதற்காக பணத்தை திருப்பிக் கொடுத்த அவலம் அரங்கேறியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கோவிலூர் அருகே இராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ராஜசேகரன்.

பள்ளியின் வளர்ச்சி நிதி என்று கூறி பள்ளி மாணவ மாணவியர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக தொடர்ச்சியாக பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்வி அதிகாரி கீதா விசாரணை நடத்தி விட்டுச் சென்றார்.

இதனையடுத்து பள்ளியின் தலைமையாசிரியர் ராஜசேகரன் அதிகமாக கட்டணம் வசூலித்த பணத்தை திருப்பித் தருவதாக மாணவர்களிடம் கூறியுள்ளார்.

தலைமையாசிரியரிடம் கேட்டபோது பள்ளியின் வளர்ச்சி நிதிக்காக பள்ளி மாணவ மாணவியர்களிடம் 50 முதல் 100 ரூபாய் வசூல் செய்வதை ஒப்புக் கொண்டார். அதனை ஏன் திருப்பித் தருவீர்கள் என்று கூறு கேட்ட போது எங்களுடைய உயர் அதிகாரியான மாவட்ட கல்வி அலுவலர் கீதா திருப்பித் தர உத்தரவு செய்ததன் அடிப்படையில் திருப்பித் தருகிறேன் என்று பகிரங்கமாக வாக்குமூலம் அளித்தார்.

செய்தி சேகரித்தது தலைமை ஆசிரியருக்கு தெரியவந்ததை அடுத்து மாணவர்களுக்கு ஒரு அப்ளிகேஷனை வழங்கி அதில் தாங்களே பணத்தை பெற்றுக் கொண்டேன் என்று எழுதிக் கொடுத்து பெற்றோரின் கையெழுத்தை நீங்களே போட்டுக் கொள்ளலாம் அது உங்களுடைய விருப்பம் என்று மறைமுகமாக கூறி மாணவ-மாணவிகளிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு மாணவர்களிடம் வாங்கிய 200 ரூபாயை திருப்பி வழங்கி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ஏழை மாணவ மாணவியர்களிடம் அதிகக் கட்டணம் வசூல் செய்யும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் கோரிக்கையாக உள்ளது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 846

    0

    0