ஓட்டு போட வந்த வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பு : அதிமுக – திமுக இடையே வாக்குவாதம்!!
Author: Udayachandran RadhaKrishnan27 February 2023, 10:57 am
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையான வாக்களித்து வருகின்றனர்.
இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக கட்சியின் தென்னரசு, தேமுதிக கட்சியின் எஸ். ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா, சுயேட்சைகள் என 77 வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திமுக – அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு பெரியார் நகர் பகுதியில் வாக்குச்சாவடிக்கு அருகே வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டதால் திமுக – அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடி அருகே பரபரப்பு ஏற்பட்டது.