3 நாட்களில் ரூ.42 லட்சம் வசூல் : விதியை மீறியவர்களிடம் கறார் காட்டிய போக்குவரத்து துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2022, 5:41 pm

சென்னையில் கடந்த 3 நாளாக போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.42 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக அமல்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து போலீசார் அதிரடியாக அபராதம் விதித்தனர். சென்னையிலும் கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் அதிரடி காட்டினார்கள்.

அந்த வகையில் சென்னையில் கடந்த 3 நாளாக போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.42 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகளைப் போக்குவரத்து போலீசார் பதிவுசெய்துள்ளனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறுகையில், கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும். யாருக்கும் பாரபட்சம் காட்டப்படாது என தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி வாகனம் ஓட்டுமாறு கேட்டுக் கொண்டனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 449

    0

    0