காஃபி வித் கலெக்டர் கலந்துரையாடலின் போது பள்ளி மாணவிகளுடன் மதிய உணவு அருந்திய ஆட்சியர் : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2022, 8:24 pm

காஃபி வித் கலெக்டர் என்ற பெயரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், அரசு பள்ளிகளை சேர்ந்த 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் கலந்துரையாடி அறிவுரைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் சமீரன், தன்னுடைய பால்ய கால நினைவுகள், தனது தனிப்பட்ட ஆசைகளை பகிர்ந்து கொண்டார்.

பின்னர் மாணவர்களுடன் ஒன்றாக சுற்றுலா பேருந்தில் பயணம் செய்த அவர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுடன் பூச்சியியல் அருங்காட்சியகத்தை ஆட்சியர் சமீரன் பார்வையிட்டார்.

பின்னர் அங்கிருந்து அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு சென்றனர். அரசு மருத்துவக்கல்லூரியில் வகுப்பறைகள், பாடத்திட்டம் குறித்து தெரிந்து கொண்ட மாணவ மாணவிகளுடன் ஆட்சியர் அங்கேயே மதிய உணவை சாப்பிட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi total earnings worldwide போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!