கால்பந்து போட்டியில் கோவை மாணவர் சாதனை: பாராட்டி பரிசளித்த மாவட்ட ஆட்சியர்!!

Author: Rajesh
19 April 2022, 12:59 pm

கால்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய கோவை மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு எப்சி போன்ற முன்னணி அணிகள் பங்குபெறும் மாபெரும் மாநில ஜூனியர் கால்பந்து போட்டி பெங்களூரு கால்பந்து சங்கத்தின் சார்பாக பெங்களூர் கால்பந்து அரங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றது.

இதில் கோவையை சேர்ந்த TFSC அணியின் கால்பந்து வீரரான கோல் கீப்பர் முஹம்மத் ரிஃபாத் பெங்களூரில் ராமன் ஸ்போர்ட்ஸ் அகாடெமி அணிக்கு தேர்வாகி விளையாடி கர்நாடகாவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவர் இந்த முழு போட்டிகளிலும் சிறப்பாக சிறந்து விளங்கியுள்ளார்.கோல்கீபேர் என்கின்ற முறையில் பல போட்டிகளில் இவர் சிறப்பான தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி அங்குள்ள விளையாட்டு ரசிகர்கள் விளையாட்டு ஆர்வலர்கள் பல பயிற்சியாளர்கள் ஆகியவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் .

சாதித்த மாணவனை ஊக்கப்படுத்தும் விதமாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி எஸ் சமீரன் அவர்கள் சிறப்பு பரிசு கொடுத்து பாராட்டியுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1151

    0

    0