இவ்வளவு நாளா என்ன வேலை செஞ்சீங்கனு சம்பளம் வாங்கறீங்க? வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு : அதிகாரிகளுக்கு டோஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2022, 1:07 pm

கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு நடத்திய போது வருவாய்த்துறை அதிகாரிகளின் பணி திருப்தி அளிக்காததால் அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அலுவலக பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருகின்றார்களா என்பது குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய சான்றுகள் பட்டாக்கள் விரைந்து வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

குறித்த நேரத்திற்கு பணிக்கு வராத அதிகாரிகள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் அளித்த மனுக்கள் கிடப்பில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றீர்கள் என அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ்கள் பெறவும் பட்டாக்களை பெறவும் வந்திருந்த பொது மக்களிடம் மாவட்ட ஆட்சியர் குறைகள் குறித்து கேட்டறிந்தார். அவர்கள் எந்த காரணத்திற்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்கள் என்பது குறித்தும் எத்தனை நாளாக சான்றிதழ்கள் பெற அலைந்து வருகின்றார்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

வருவாய்த்துறை அதிகாரிகளின் பணி மாவட்ட ஆட்சியருக்கு திருப்தி அளிக்காததால் மாவட்ட ஆட்சியர் வருவாய் துறை அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!