ஒருதலை காதலால் மாணவியை கடத்திய கல்லூரி மாணவன்… போக்சோவில் கைது செய்த போலீசார்!!
Author: Babu Lakshmanan26 May 2022, 10:39 am
கோவையில் 16 வயது கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற மாணவனை போக்ஸோவில் போலீசார் கைது செய்தனர்.
கோவையை சேர்ந்த 16 வயது மாணவி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த தாராபுரத்தை சேர்ந்த கவியரசன் (19) என்ற மாணவர், அந்த மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று கல்லூரி சென்று வீட்டிற்கு திரும்பிய மாணவியை கவியரசன் கடத்திச் சென்றதாக பெற்றோர்கள் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தனர்.
புகார் அடிப்படையில் தேடிய போலீசார் கவியரசன் மற்றும் மாணவியை மீட்டனர். இதையடுத்து மாணவியை கடத்திச் சென்ற கவியரசன் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.