காதலை பிரேக்அப் செய்ததால் ஆத்திரம் ; கடைசியாக காதலனை சந்தித்த காதலிக்கு அரிவாள் வெட்டு… குமரியில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
10 June 2023, 4:33 pm

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் காதல் விவகாரம் கல்லூரி மாணவியை வெட்டுக்கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்ற காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மடிச்சல் ஈத்தவிளை பகுதியை சேர்ந்த டெனிஷா. இவர் மார்த்தாண்டம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த வெர்ஜின் ஜோஸ்வா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக டெனிஷா வெர்ஜின் ஜோஸ்வாவிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால், தாங்கள் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோக்களை தருவதாக மார்த்தாண்டம் அருகே பழைய பெப்சி கம்பெனி பின்புறம் உள்ள தென்னை தோப்பில் வரவழைத்து மறைத்து வைத்திருந்த வெட்டுகத்தியால் டெனிஷாவை சராமரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று உள்ளான்.

அரிவாள் வெட்டு விழுந்ததில் டெனிஷாவின் சத்தம் கேட்கவே பொதுமக்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மார்தாண்டம் போலீசார் வெர்ஜின் ஜோஸ்வாவை தேடி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 359

    0

    0