3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.. கல்லூரி பேராசிரியர் கைது!
Author: Hariharasudhan27 December 2024, 12:46 pm
தஞ்சையில், 3 ஆண்டுகளாக இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த கல்லூரி பேராசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கோவிளாச்சேரியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறந்து. இங்கு, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஜியாவுதீன் என்பவர் அரபு வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதனிடையே, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, இவரை கல்லூரி நிர்வாகத்தினர், பணியில் இருந்து நிறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், இவர், ஆடுதுறையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு, கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
இந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் துவக்கினர். இதன் அடிப்படையில், பேராசிரியர் ஜியாவுதீனை, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதனையடுத்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, சென்னை கிண்டியில் உள்ளா அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, பல்கலை அருகில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ‘என் பாதை தெளிவாக தொடங்கியுள்ளது’.. சாட்டையடித்த பின் அண்ணாமலை பேச்சு!
இந்தச் சம்பவத்திற்கு எதிராக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள், SFI உள்ளிட்ட அமைப்பினர், பல்கலை அருகே போராட்டம் நடத்தினர். பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நீதி கிடைக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுத்து உள்ளார்.