அம்மாவ ஆடு மாடு எல்லா விக்க சொல்லிடு.. அப்பாவுக்கு செலவு வைக்காத : தம்பிக்கு உருக்கமான கடிதம் எழுதி கல்லூரி மாணவி தற்கொலை!!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2022, 6:17 pm

கடலூர் : கல்லூரி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவியின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில், இந்த கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் மாணவ, மாணவிகள் தான். அதிகளவு மன அழுத்தம், கற்றல் திறனில் குறைப்பாடு, தனிமை என அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும், அவர்களின் மன நலன் சார்ந்து பேசவும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் தவறி விட்டதாகவே தெரிகிறது. அதிகளவிலான மாணவ, மாணவிகள் இந்த ஒரு வருடத்தில் மட்டுமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்றின் கழிவறையில் அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகள் தனலட்சுமி (வயது 19). இவர் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள கே.எம்.சி பெண்கள் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவி, கல்லூரியின் பின்புறத்தில் உள்ள கழிவறைக்கு சென்று, துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த விரைந்து வந்த கடலூர் புதுநகர் போலீசார் மாணவியின் உடலை பார்வையிட்டனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!