ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி… இறந்தும் வாழ வைத்த பெற்றோர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2023, 1:39 pm

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி,மாணவரின் கண்களை தானம் செய்ய பெற்றோர் ஒப்புதல்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் கீர்த்தி சீனிவாசன் (19) இவர் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று கல்லூரி விடுமுறை என்பதால் தனது நண்பர்களான சித்தார்த்,ஜெயந்த், அர்ஜுன் ராஜ்,சுதர்சன்,பிரதீஷ் ஸ்ரீ, ஹரிஷ் சஞ்சய் ஆகியோருடன் மேட்டுப்பாளையம் ரயில்வே பாலம் அருகில் பவானி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

குளித்துக் கொண்டிருக்கும் போது கீர்த்தி சீனிவாசன் மற்றும் பிரதேஷ்ஆகிய இருவரும் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியுள்ளனர்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கிய பிரதேஷ் என்ற மாணவரை காப்பாற்றி உள்ளனர் இருப்பினும் கீர்த்தி சீனிவாசன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

இது குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது உடனடியாக காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் லைப் காட் படையினர் பவானி ஆற்றுக்குச் சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் கீர்த்தி சீனிவாசனை தேடி வந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் ஆற்றில் தேடி வந்த நிலையில் கீர்த்தி சீனிவாசன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதை அடுத்து மாணவரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இறந்த மாணவன் கீர்த்தி சீனிவாசனின் கண்களை தானம் செய்ய உள்ளதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். பெற்ற மகனை இழந்த துக்கத்திலும் கூட கண்களை தானம் செய்ய பெற்றோர்கள் முன்வந்துள்ள நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 465

    0

    0