கோவை சரவணம்பட்டி அருகே என்ஜினியரிங் மாணவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான என்ஜினீயரிங் மாணவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கி இருந்து ஒரு பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவர் ஓரின சேர்க்கையாளர் (கிரைண்டர்) செயலி ஒன்றில் அடிக்கடி தகவல் பகிர்ந்து வந்தார். இந்த செயலியில் அறிமுகமான வாலிபர் ஒருவர் ஓரின சேர்க்கையில் ஈடுபட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து மாணவர் நேற்று மாலை சரவணம்பட்டி பூந்தோட்டம் நகர் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு சென்றார். அங்கு வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவருடன் மாணவர் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென மேலும் 3 பேர் அங்கு வந்துள்ளனர். நால்வரும் மாணவரை தாக்கி ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி கொடுமைபடுத்தி உள்ளனர்.
பின்னர் மாணவரின் செல்போனை பறித்த கும்பல், மாணவனின் வங்கி கணக்கில் இருந்து வங்கி கணக்கிற்கு ரூ.11 ஆயிரம் பணத்தை மாற்றம் செய்தனர். இதனையடுத்து, அந்த கும்பல் மாணவரின் செல்போனை பறித்து கொண்டு 4 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். தாக்குதலில் உடல் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இது குறித்து சரவணம்பட்டி போலீசில் மாணவர் புகார் அளித்தன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு HRWF பவுண்டேஷன் என்ற தனியார் அறக்கட்டளை சார்பாக "மகுடம்" விருதுகள் (2025) வழங்கும் விழா சென்னை…
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
This website uses cookies.