எலித் தொல்லையால் பறி போன உயிர் : மருந்து தடவிய கேரட்டை சமைத்து சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2022, 1:09 pm

கோவை : பொள்ளாச்சி அருகே எலியை கொல்ல எலி மருந்த தடவி வைத்த காய்கறிகளை சமைத்துச் சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையத்தை சேர்ந்தவர் தேவசித்து. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி தேவசித்தின் மகள், கல்லூரி மாணவியான எனிமா ஜாக்குலின் கடையில் இருந்த கேரட்டை எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து மயக்கமடைந்த ஜாக்குலினை பொள்ளாச்சி அரசு மருத்துமனை கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் எனிமா ஜாக்குனின் தந்தை நடத்திவரும் மளிகைக்கடையில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் காய்களில் எலி மருந்து வைத்த காய்கறியை சமைத்து சாப்பிட்டால் தான் கல்லூரி மாணவி உயிரிழந்தாக விசாரனையில் தெரியவந்துள்ளது.

எலித்தொல்லைக்கு வைத்த விஷமே மகளின் உயிரை பறிக்க காரணமாக இருந்ததை எண்ணி குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி