டிப்பர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் கல்லூரி மாணவர் பலி : உறவினர்கள் சாலைமறியல்.. தடியடி நடத்திய போலீசாரால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 ஆகஸ்ட் 2022, 11:16 காலை
Police Attack - Updatnews360
Quick Share

விழுப்புரம் : நெமிலி கிராமத்தில் கல்குவாரி டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளைஞர் தலை நசுங்கி உயிரிழந்த நிலையில் உடலை எடுக்க மறுத்து உறவினர்கள் நான்கு மணி நேரத்திற்கு உடலை எடுக்க விடாமல் மறியலில் ஈடுபட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அருகேயுள்ள நெமிலி கிராமத்தை சார்ந்த முனியப்பன் என்பரது ஒரே மகனான கார்த்திக் கல்லூரி படிப்பினை முடித்துவிட்டு காவலர் பணிக்காக விண்ணபித்து பயிற்சி பெற்று வருகிறார்.

இளைஞரான கார்த்திக் தனது வீட்டிலிருந்து திருவக்கரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கல்குவாரியிலிருந்து ஜல்லி ஏற்றி கொண்டு வந்த லாரி அதிவேகமாக வந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இளைஞர் நசுங்கி உயிரிழந்தார். இதனையடுத்து விபத்து நடந்த பகுதியில் 20 க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்படுவதால் டிப்பர் லாரி ஓட்டுனர்கள் மது போதையிலும், செல்போன்களை பேசிகொண்டு அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி இது போன்ற விபத்து ஏற்படுவதாக கூறி விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து உடலை எடுக்க மறுத்து கிராம மக்கள் உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய கலைந்து செல்லாததால் 4 மணி நேரத்திற்கு மேலாக உடலை எடுக்க அனுமதிக்காமல் போராட்டம் செய்தனர்.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி எஸ் பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால் லேசான தடியடி நடத்தினர்.

இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றதால் இறந்த இளைஞரின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கோட்டாட்சியர் ராமச்சந்திரன் உறவினர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இரவு நேரங்களில் கல்குவாரி டிப்பர் லாரிகள் இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்தை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 525

    0

    0