விழுப்புரம் அருகே அமைச்சரின் சொந்த ஊரில் கல்லூரி மாணவன் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் அருண் (21 வயது). இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருடைய இருசக்கர வாகனத்தை அதே டி. எடையார் கிராமத்தைச் சார்ந்த சரத் (20 வயது) கீர்த்தி (17 வயது பிளஸ் டூ மாணவன்) சத்தியன் (16வயது பிளஸ் 1 மாணவன்) திருடி உள்ளனர். இந்த மூன்று பேரும் இருசக்கர வாகனங்கள் திருடுபவர் மற்றும் கஞ்சா போதை பழக்கம் உள்ள வரும் கஞ்சா விற்பனை செய்பவர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், கல்லூரி மாணவன் அருண் என்பவர் இவர்களிடையே இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக மூன்று பேருடைய வாக்குமூலத்தை வீடியோ மூலம் செல்போனில் பதிவு செய்துள்ளார். மேலும், எனது இரு சக்கர வாகனம் தரவில்லை என்றால், இதனை காவல் நிலையத்தில் கொடுத்து விடுவேன் எனவும் சொல்லி உள்ளார்.
இதனை அறிந்த சரத், கீர்த்தி, சத்தியன் ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு அருணை, உனது இரு சக்கர வாகனம் தருவதாக கூறி அழைத்துச் சென்று, தங்களின் கூட்டாளியை வரவழைத்து, அடித்து, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர், அருணின் உடலை பனப்பாக்கம் ஏரியில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். இதனையடுத்து, அந்த மூன்று பேரில் சத்தியன் என்ற ஒருவன், போதையில் கிராமத்தில் வந்து அருணை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர் என உளறியுள்ளார். இந்த தகவலின் பேரில் கிராம மக்கள் ஒன்று திரண்டு மூன்று பேரையும் பிடித்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இறந்த கல்லூரி மாணவன் உடலை கிணற்றிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் மற்றும் திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு துறையினர்,மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக 3 பேரை திருவெண்ணைநல்லூர் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் இவர்கள் முக்கிய நபர்கள் என தெரிய வரவே, இதில் மேலும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், கல்லூரி மாணவன் உடலை பிரேத பரிசோதனை உடனடியாக பண்ணக்கூடாது, எங்களிடம் காண்பித்துவிட்டு அப்புறம்தான் பிரேதப் பரிசோதனை பண்ண வேண்டும் எனக்கோரி கல்லூரி மாணவியின் உறவினர்கள் திருக்கோவிலூர் திருவெண்ணைநல்லூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து பதட்டமான நிலை இருப்பதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சொந்த கிராமம் டி. எடையார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.எடையார் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் வீட்டிற்கு அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது பொதுமக்கள் ஊருக்குள் வரக்கூடாதென கூறி எதிர்ப்பு தெரிவித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வீட்டின் வாசலில் அரைமணி நேரம் போராடியும் அஞ்சலி செலுத்த விடாததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீட்டின் பூட்டை உடைத்தத பிறகு, வீட்டிற்குள் சென்று பிறகு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.