கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து.. சேலம் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி!
Author: Udayachandran RadhaKrishnan16 April 2025, 12:58 pm
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு கிடையாது.. கூட்டணி பற்றி திமுகவுக்கு ஏன் எரியுது? இபிஎஸ் விளாசல்!
சேலத்தை சேர்ந்த மோகன பிரியன் என்பவர் ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவி சூர்யா என்ற பெண்ணுடன் பழகி உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை மாணவி கல்லூரி செல்ல வேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது பேருந்துக்காக காத்திருந்த மாணவியிடம் மோகன பிரியன் பேச்சு கொடுத்துள்ளர்.

அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவி சூர்யாவை குத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
விசாரணையில், இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகிய நிலையில், இன்று தான் நேரில் இருவரும் சந்தித்ததாகவும், இளைஞரை பிடிக்கவில்லை என மாணவி கூறியதால் ஆத்திரத்தில் மாணவியை குத்திவிட்டு இளைஞரும் தற்கொலைக்கு முயன்றுள்ளளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.