காதலனுடன் தொடர்பை துண்டித்த கல்லூரி மாணவி : காரணமாக இருந்த தனியார் பேருந்து நடத்துநரை நண்பர்களுடன் தாக்கிய காதலன்..!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2022, 3:46 pm

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே காதலி பேசாமல் புறக்கணித்தால் கோபமடைந்த காதலன் காதலியின் ஆண் நண்பரை தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

திருச்சி மாவட்டம், தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி 19 வயதான சரண்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதற்கிடையில் கல்லூரி மாணவி சரண்யா தினமும் கல்லூரிக்கு சென்றுவந்த ஸ்ரீ ரெங்கநாதன் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றும் நாகேஸ்வரனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரண்யா காதலன் கார்த்தியிடம் பேசாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

தன்னிடம் காதலி பேசாததற்கு நாகேஸ்வரன்தான் காரணம் என கோபமடைந்த கார்த்தி தனது நண்பர்கள் குணா, ராக்கி ஆகியோருடன் மதுபோதையில் சமயபுரம் நால்ரோடு அருகே பேருந்தை வழிமறித்து நாகேஷ்வரனை தாக்கியுள்ளனர்.

அப்போது பேருந்து ஓட்டுனர் துரை தடுத்தபோது அவரையும் மதுபோதையில் இருந்த மூன்று பேரும் தாக்கியதுடன் பேருந்து கண்ணாடியையும் கற்களை வீசி உடைந்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து நாகேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் சமயபுரம் போலீசார் கார்த்தி, குணா, ராக்கி மூன்று பேரின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்தை வழிமறித்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான செல்போன் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்