லாரியின் பின்பக்கம் அதிவேகமாக வந்த பைக் மோதி கோர விபத்து : துடிதுடிக்க பலியான கல்லூரி மாணவர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2023, 3:55 pm

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு எஸ்.எஸ்.புதூரை சேர்ந்தவர் தருண் சாஸ்தா(21)இவரது நண்பர் வடமதுரை கெச்சானிபட்டி சேர்ந்த சுரஜ் குமார்(21)இவர்கள் திண்டுக்கலில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வருகிறார்கள்

இருவரும் கல்லூரியை முடித்துவிட்டு இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சுடாமணிபட்டி அருகே குவாரிக்கு செல்வதற்காக திரும்பிக் கொண்டிருந்த லாரியின் மீது பின்பக்கம் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவரும் துடிதுடித்து உயிரிழந்தனர்

அக்கம் பக்கத்தினர் உடனடியாக தாடிக்கொம்பு காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் இருவர் உடலையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்கள் விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்வதால் தான் இவ்வாறு உயிர்சேதம் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்

கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?