‘ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை’: கோவை அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்..!!

Author: Rajesh
17 March 2022, 5:40 pm

கோவை: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசு வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கல்வி கூடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அந்த தீர்ப்பை கண்டித்து கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை நிராகரிக்கிறோம், கர்நாடக உயர்நீதிமன்றமே காவிகளுக்கு அடிபணியாதே, முஸ்லீம் விரோதபோக்கோடு செயல்படாதே, ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை என்ற பதாகைகளை ஏந்தி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் யை கண்டித்தும் கர்நாடக உயர்நீதிமன்றத்தை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!