ரயில் நிலையத்தில் அரங்கேறிய அடுத்த அதிர்ச்சி… கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் கற்கள் வீசி தாக்குதல் : வைரலாகும் ஷாக் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan14 October 2022, 9:43 pm
வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் வரை செல்லக்கூடிய மின்சார ரயில், ராயபுரம் ரயில் நிலையத்தை அடையும் பொழுது சுமார் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
ரயிலில் பயணம் செய்த ஒரு தரப்பினருக்கும், ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு தரப்பினருக்கும் மோதல் நடைபெற்ற நிலையில் அந்த இடமே கலவர காடாக காட்சியளித்தது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அதே ரயிலில் ஏறி வண்ணாரப்பேட்டை சென்ற நிலையில், ரயில்வே போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தி இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.