14 வருடத்திற்கு பிறகு விஜய்யுடன் காம்போ? லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியானது!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2022, 2:23 pm

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் விஜய்யும் ஒருவர். இவர் நடித்த பல படங்கள் வசூலை வாரிக் குவித்தது. ரஜினி கமலுக்கு பிறகு விஜய், அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ளனர்.

அந்த வகையில் விஜய்யின் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருவது வழக்கம். சமீபத்தில் விஜய்யின் திரைப்படமான பீஸ்ட் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்தது.

இதையடுத்து விஜய் தெலுங்கு பட இயக்குநர் வம்சியுடன் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே லோகேஷ் – விஜய் காம்போவில் வெளியான மாஸ்டர் படம் மாஸ் ஹிட் ஆனது. இந்த நிலையில் விஜய் 67வது படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் நடித்துள்ளார். அப்படி மீண்டும் இவர்கள் இணைந்தால் இருவரும் இணைவது 5வது முறையாகும். 2008ஆம் ஆண்டு வெளியான குருவி படத்தில் கடைசியாக இருவரும் ஜோடி சேர்ந்திருந்தனர். 14 வருடங்களுக்கு பிறகு இருவரும் ஜோடி சேர உள்ளதாக கூறப்படுகிறது.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!