வந்தா வாங்க.. வராட்டிப் போங்க : நிருபர்கள் கேட்ட கேள்வி.. திருச்சியில் அண்ணாமலை பரபரப்பு பதில்!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2024, 1:31 pm

வந்தா வாங்க.. வராட்டிப் போங்க : நிருபர்கள் கேட்ட கேள்வி.. திருச்சியில் அண்ணாமலை பரபரப்பு பதில்!

திருச்சி விமான நிலைய முனையம் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்திருந்தார். பிரதமர் மோடியை வரவேற்க பலர் வந்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வராமல் இருந்தது குறித்து அண்ணாமலையிடம் கேள்வி கேட்க்ப்பட்டது.

இது குறித்து பேசிய அண்ணாமலை, பிரதமர் மோடியை வரவேற்க வருபவர்களில் பெரிய தலைவர்கள் சின்னத் தலைவர்கள் என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்றும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும் என மனதார நினைப்பவர்கள் வரவேற்க வந்தால் போதும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியை வரவேற்க வராதவர்களை நினைத்து தாங்கள் வருத்தப்படப் போவது கிடையாது என்றும் அதேபோல் போன் போட்டு வரவேற்க வாங்க என தாங்கள் அழைக்கப் போவதும் கிடையாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். பிரதமர் மோடி கடந்த காலங்களில் எப்போது தமிழ்நாடு வந்தாலும் வரவேற்கவோ அல்லது வழியனுப்பவோ கட்டாயம் செல்லக் கூடியவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

ஆனால் இன்று திருச்சியில் பட்டமளிப்பு விழா, விமான நிலையத்தின் 2வது முனையம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திருச்சி வருகை தந்த பிரதமர் மோடியை வரவேற்க அவர் வரவில்லை.

இதன் மூலம் பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி உணர்த்தியிருப்பதால் இது அரசியல் களத்தில் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 408

    0

    0