நேருக்கு நேர் வா,.. மோதி விளையாடுவோம் : ரஜினி ரசிகர்களை சீண்டிய விஜய் ரசிகர்கள்.. நகர்வலம் வரும் போஸ்டர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2023, 7:29 pm

நாளை தமிழக முழுவதும் ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜெயிலர் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவின் பொழுது கழுகு காகம் என குட்டி கதை கூறிய ரஜினி விஜயை தான் காகம் என ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது மதுரையில் விஜய் ரசிகர்கள் ரஜினிக்கு சவால் விடும் வகையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் எல்லாத்துக்கும்னா… எல்லாத்துக்கும்தா… சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி நேருக்கு நேர் வா மோதி விளையாடுவோம் என்ற வசனத்தோடு தளபதி படம் விஜய் படங்களை அச்சிட்டு ஒட்டிய நோட்டீஸ்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Anurag Kashyap ஊரையே காலி செய்கிறேன்.. திடீரென புறப்பட்ட பிரபலம்.. என்ன காரணம்?