நகைச்சுவை நடிகர் புகழ் அவரது நீண்ட நாள் காதலியை இரண்டாவது முறையாக தாலி கட்டி திருமணம் செய்து கொண்டது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானாவர் புகழ். இவர் அந்த நிகழ்ச்சியின் மூலமே தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை திரட்டிக் கொண்டார். தற்போது, திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது நீண்ட நாள் காதலியான கோவை போத்தனூரைச் சேர்ந்த பென்சி என்னும் பெண்ணை கடந்த வியாழக்கிழமை, கடலூர் விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்தில் இருவீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி வைத்து அனைத்து சின்னத்திரை நட்சத்திரங்களை அழைத்து விருந்து வைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, புகழ் தனது காதலி பென்சியை கடந்த ஆண்டே கோவை பெரியார் படிப்பகத்தில் வைத்து சுயமரியாதை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
தற்போது, ஒரு ஆண்டுக்கு பிறகு பெரியார் படிப்பகத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட காதலியை, மீண்டும் 2வது முறையாக கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பகுத்தறிவுவாதியாக முதலில் சுயமரியாதை முறையில் திருமணம் செய்த புகழ், பிறகு கோவிலில் சடங்கு சம்பிரதாயத்துடன் திருமணம் செய்து கொண்டதை நெட்டிசன்கள் விமர்சித்தும், ஆதரவு தெரிவித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.