நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களுக்கு நினைவு பரிசு : மகளிர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்கம் கவுரவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2022, 2:27 pm

ஈரோடு : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களைப் போற்றும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சத்தியமங்கலம் நகராட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பெண்களுக்கு அனைத்து வணிகர் சங்கத்தினர் மற்றும் ஓய்ஸ்மேன் கிளப் சார்பில் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களைப் போற்றும் வகையில் சத்தியமங்கலம் ஓய்ஸ்மேன் கிளப், அனைத்து வணிகர்கள் சங்கம், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கத்தினர் சார்பில் பெண்களை கௌரவப்படுத்தும் விதமாக நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சத்தியமங்கலம் 5வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சத்தியமங்கலம் நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஜானகி ராமசாமிக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.

பின்னர் சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து பெண்களுக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1573

    0

    0